News December 28, 2024
வங்கிக் கணக்கில் ரூ.1,000.. இன்னும் 2 நாள்களில் டெபாசிட்

அரசு பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதே திட்டம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவிகளுக்கும் நாளை மறுநாள் (30ஆம் தேதி) விரிவுப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதும், அந்த மாணவிகளின் வங்கிக்கணக்கில் அரசால் மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்யப்படவுள்ளது.
Similar News
News April 4, 2026
உஜ்வாலா பயனாளிகளுக்கு சிக்கல் இல்லை

மேற்காசிய போரினால் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு விலையும் அதிகரித்தது. போர் தொடர்ந்து வருவதால் சிலிண்டர் விலை மேலும் அதிகரிக்குமோ என்ற அச்சம் மக்களிடம் உள்ளது. ஆனால், PM உஜ்வாலா யோஜனாவின் பயனாளிகளுக்கு ₹300 தள்ளுபடியுடன், மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டருக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்திட்டத்தில் பயன்பெறும் கிராமப்புற மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
News April 4, 2026
வெறும் வயிற்றில் மது குடித்தால்…

மது பிரியர்கள் சில டிப்ஸ் மூலம் ஆல்கஹாலால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். *குறைந்த நேரத்தில் அதிக மது குடிப்பதை தவிர்க்க வேண்டும். *மது போதையில் இருக்கும்போது புகைப் பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. *வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. *2 (அ) அதற்கு மேலான மது வகைகளை மிக்ஸ் செய்து குடிப்பதை கைவிடவும். *இப்படி செய்தால் ஹேங்க் ஓவர், உடல்நலப் பிரச்னையை தடுக்கலாம். SHARE
News April 4, 2026
திருமாவளவனுக்கு மாற்றாக ஜோதிமணி.. யார் இவர்?

காட்டுமன்னார்கோவிலில் <<19567832>>திருமாவளவன் அறிவித்துள்ள வேட்பாளர் <<>>ஜோதிமணி, விசிக உறுப்பினர் அல்ல என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸில்(காங்., EX தலைவர் இளையபெருமாளின் மகன்) இருக்கும் அவருக்கு இது இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. விசிக (அ) காங்., எந்த சின்னத்தில் போட்டி என தெரியவில்லை என சற்றுமுன் பேட்டியளித்துள்ளார். ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிப்பில் விசிக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாக பேச்சு உள்ளது.


