News November 23, 2024

ரூ.1,000 கல்வி உதவித் தொகை தேர்வுக்கான அவகாசம் நீட்டிப்பு

image

9ஆம் வகுப்பு கிராமப்புற மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைக்கான ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நவ.25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், விருப்பமுள்ள மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளது.

Similar News

News December 2, 2025

கிங் கோலியின் சாதனை.. வீறுநடை போடும் இந்தியா

image

ODI கிரிக்கெட்டில் சேஸ் மாஸ்டரான விராட் கோலி கடைசியாக அடித்த 17 சதங்களில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவவில்லை. 17 போட்டிகளில் இந்தியா 15-ல் வெற்றி, இரு போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளன. மேலும், சதமடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதிலும் நம்பர் 1 வீரராக கோலி உள்ளார். அவர் 82 சதங்கள் விளாசியுள்ள நிலையில், அதில் இந்தியா 59 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.

News December 2, 2025

ரசிகர்களை என்னை கொண்டாட வேண்டாம்: SK

image

சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, தனது ரசிகர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதை சிவகார்த்திகேயன் பகிர்ந்துகொண்டார். ரசிகர்கள் தன்னை கொண்டாட வேண்டாம் என அறிவுறுத்திய அவர், பெற்றோர்களை கொண்டாடினால் போதும் எனவும் கூறியுள்ளார். ரசிகர்கள் தன்னிடம் குடும்பமாக பழகவேண்டும் என்பதே ஆசை என்றும், அதனால்தான் அனைவரையும் சகோதர, சகோதரிகள் என அழைத்து வருவதாகவும் பேசியுள்ளார்.

News December 2, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 2, கார்த்திகை 16 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: த்ரயோதசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

error: Content is protected !!