News April 9, 2025
கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம்.. சீமான் வலியுறுத்தல்

கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தேர்தலின்போது கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் அளிப்போம் என திமுக வாக்குறுதி அளித்து இருந்ததாக சீமான் கூறியுள்ளார். திமுக அரசின் ஆட்சி முடிய இன்னும் ஓராண்டே உள்ள நிலையில் ரூ.100 மானியம் அளித்து மக்கள் துயரத்தை போக்க வேண்டும் எனவும் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News April 17, 2025
மகாராஷ்டிர பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம்!

1 – 5 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் 3-வது மொழியாக ஹிந்தி கற்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. அங்குள்ள பாஜக கூட்டணி அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு ஹிந்தியை திணிப்பதாக TN உள்ளிட்ட மாநிலங்கள் குற்றஞ்சாட்டும் நிலையில் இந்த அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது.
News April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டபடி புதிய உறுப்பினர் நியமனம் கூடாது: SC

வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட்(SC) உத்தரவிட்டுள்ளது. மேலும், வக்ஃப் என பதியப்பட்ட, அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
News April 17, 2025
நில ஆவணங்களை எளிதாக அறிய புதிய செயலி!

நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை, அறிய புதிய செயலியை வருவாய் துறை உருவாக்கி வருகிறது. செல்போனில், ‘Tamilnilam Gioinfo’ செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில், தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ, அந்த இடத்தின், கூகுள் மேப்புடன், சர்வே எண் விவரங்கள் டிஸ்பிளே ஆகும். அடுத்த சில மாதங்களில், இந்த செயலி செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இது வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்க்க உதவும்.