News August 25, 2024
நெல்லை வாலிபரிடம் ரூ.10 லட்சம் நூதன மோசடி

பாளை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுரு (32) என்பவர் டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என மர்ம நபர் பேசிய வார்த்தையை நம்பி ரூ.10 லட்சத்தை மர்ம நபரின் கூகுள் பேவிற்கு செலுத்தியுள்ளார். ஆனால் அதற்கான கூடுதல் பணம் செல்வகுருவிற்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
நெல்லையில் வேலை நிறுத்தம் அறிவிப்பு..!

மத்திய அரசு மோட்டார் வாகன தகுதிச் சான்று கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 9 நள்ளிரவு முதல் 5,000-க்கும் மேற்பட்ட லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதனால் சுமார் 25,000 தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
News December 6, 2025
நெல்லை: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

நெல்லை மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் இங்கு <
News December 6, 2025
நெல்லை: விஷம் அருந்தி இளம்பெண் தற்கொலை!

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பகுதியை சேர்ந்த முத்தரசு என்பவருடைய மகள் பரமேஸ்வரி (28). இவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்தார். அவரை மீட்டு பாளை ஜகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரசிங்கபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


