News February 10, 2025
RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 21, 2025
ஒகேனக்கல் ஆற்றில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு

செங்கல்பட்டை சேர்ந்த முருகேசன் திருக்கழுக்குன்றம் கிராம அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த நிலையில் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்த போது ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்புத் துறை மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ஒகேனக்கல் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News April 20, 2025
மொரப்பூர் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

மொரப்பூர் அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர்(23). இவர் நேற்று தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்று உள்ளார், அப்போது ஆற்றில் மூழ்கி இறந்துள்ளார். இதுகுறித்து அரூர் தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் காமராஜ் தலைமையிலான மீட்பு குழுவினர் விரைந்து சென்று ஆற்றில் சடலமாக கிடந்த கிஷோரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 20, 2025
தர்மபுரியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தர்மபுரி பிரிவு சார்பில் கோடை கால பயிற்சி முகாம் வருகின்ற 25ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே 15 ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேலும் இந்த பயிற்சி குறித்து விபரங்களுக்கு தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் நேரில் சென்று விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தெரிவித்தார்.