News February 10, 2025
RRB Group D 2025: சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 RRB Group D 2025 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2,694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். 18- 36 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000 (அடிப்படை) சம்பளம் வழங்கப்படவுள்ளது. https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளம் மூலம் பிப். 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
Similar News
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த <
News April 21, 2025
ஆம்பூர் அருகே மதுபானம் விற்பனை செய்தவர் கைது

திருப்பத்தூர், ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் நேற்று (ஏப்ரல் 20) உமராபாத் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரியவரிகம் பகுதியில் வீட்டிற்குள் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த கோபி என்பவரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News April 21, 2025
ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.