News May 7, 2025
RRB வங்கிகள் ஒருங்கிணைப்பு

26 பிராந்திய கிராம வங்கிகளின்(RRB) ஒருங்கிணைப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது. ஏப்.8-ல் நிதி சேவைகள் துறை ‘ஒரே நாடு ஒரே RRB’ என்ற கொள்கையின் அடிப்படையில் RRB வங்கிகளை ஒருங்கிணைப்பதாக அறிவித்தது. இந்த இணைப்புக்குப் பிறகு, 22,000-க்கும் மேற்பட்ட கிளைகளை உள்ளடக்கிய 28 RRB வங்கிகள் மட்டும் இருக்கும். இதன்மூலம், கிராமப்புற மக்களுக்கான கடன் சேவையில் RRB ஒருங்கிணைந்து செயல்படும் என கூறப்படுகிறது.
Similar News
News November 24, 2025
நம்பித்தானே கொடுத்தேன்: கோபமான தோனி

2019 IPL-ல் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில், டெத் ஓவர் CSK வீரர் தீபக் சாஹரிடம் கொடுக்கப்பட்டது. முதல் 2 பந்துகள் no ball ஆனது. இதனால், ‘நீ முட்டாள் இல்லை, நான் தான் முட்டாள், உன்னை நம்பித்தானே பந்தை கொடுத்தேன்’ என்று தோனி திட்டியதாக சாஹர் நினைவுகூர்ந்துள்ளார். இதனையடுத்து, 5 ரன்கள் மட்டுமே கொடுத்த சாஹர், 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். அந்த போட்டியில் CSK-வும் வென்றது குறிப்பிடத்தக்கது.
News November 24, 2025
வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா?

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
*மன அழுத்தம் குறையும்.
*ரத்த ஓட்டம் சீராகும்.
*தலைவலி குறையும்.
*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.
*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்.
உங்கள் உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 24, 2025
SIR-க்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தவெக மனு

SIR-க்கு ஆதரவாக பாஜக, அதிமுக பேசிவரும் நிலையில், திமுக, அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் SIR பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக கூறி, தவெக தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, SIR பணிகளால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது வாக்குரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக விஜய் கூறியிருந்தார்.


