News April 25, 2025
தொடர்ந்து கடைசி ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்பும் RR!

கடைசி 3 மேட்ச்சில் RR சொற்ப ரன்களை இறுதி கட்டத்தில் சேஸ் செய்ய முடியாமல் தோற்றுள்ளது. DC, LSG அணிகளுக்கு எதிரான மேட்ச்களில் கடைசி ஓவரில் , 9 ரன்களை அடிக்க முடியாமல் தோற்று போனது. அதே போலதான், நேற்றும் 12 பந்துகளில் 18 ரன்களை அடிக்க முடியாமல் 11 ரன்களில் தோல்வியடைந்தது. ஏற்கனவே, RR மீது மேட்ச் ஃபிக்சிங் குற்றச்சாட்டு வேறு எழுந்துள்ளது. ஏன் இப்படி தடுமாறுகின்றனர் என நீங்க நினைக்கிறீங்க?
Similar News
News November 29, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்., தலைவருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் (81), மாரடைப்பால் காலமானார். உ.பி., காங்., தலைவராக செயல்பட்ட இவர், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், உள் விவகாரங்கள் துறை (2004 – 2009) இணையமைச்சராகவும், 2011 – 2014-ல் நிலக்கரி அமைச்சக பொறுப்பிலும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவுக்கு காங்., தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News November 29, 2025
மெஸ்ஸியின் இந்தியா டூர்: அட்டவணை வெளியானது

இந்திய கால்பந்து ரசிகர்களே, உங்கள் விருப்பமான மெஸ்ஸியின் இந்திய பயண அட்டவணை வெளியாகிவிட்டது. இதன்படி, டிச.13 காலையில் கொல்கத்தா, அன்று மாலை ஹைதராபாத், டிச.14-ல் மும்பை, 15-ல் டெல்லியில் அவர் விளையாட்டு, நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ளவுள்ளார். முன்னதாக, கொச்சி வருவதாக இருந்த மெஸ்ஸியின் பயணம் ரத்தானது. இப்பயணத்தையொட்டி, இந்திய மக்களின் அன்புக்கு மெஸ்ஸி நன்றி தெரிவித்துள்ளார்.
News November 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 29, கார்த்திகை 13 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: நவமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: ஆயில்யம் ▶சிறப்பு: சனி வழிபாட்டு நாள். ▶வழிபாடு: கோளறு பதிகம் பாடி நவகிரகத்தின் ஆசியை பெறுதல்.


