News October 1, 2025
விற்பனைக்கு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி

2025 IPL கோப்பையை RCB வென்றதோடு, அதற்கான வெற்றி பேரணியில் 11 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், Royal Challengers அணியை விற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான விலையும் ₹17,762 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். தற்போது பிரிட்டனைச் சேர்ந்த Diageo குழுமமே இதன் உரிமையாளராக உள்ள நிலையில், Serum நிறுவன CEO அதார் பூனாவலா அணியை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Similar News
News October 1, 2025
திமுக ஆட்சியில் ₹8,000 கோடி வரி இழப்பு: RB உதயகுமார்

திமுகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் டாஸ்மாக் மூலம் ₹12 லட்சம் கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக RB உதயகுமார் தெரிவித்துள்ளார். அதேநேரம், ₹8,000 கோடி அளவில் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், நிதி மேலாண்மையில் திமுக அரசு 100% தோல்வியடைந்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். வரி ஏய்ப்பில் ஈடுபட்ட அந்த சார் யார் என்றும் அவர் வினவியுள்ளார்.
News October 1, 2025
திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் PHOTOS

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 7ஆம் நாளான இன்று, சந்திர பிரபா வாகனத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீதிகளில் பிரம்மாண்டமாக ஊர்வலம் நடைபெற்றது. பல்வேறு வகையான கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் பக்தர்களை மகிழ்வித்தன.
News October 1, 2025
சூர்யாவின் வாடிவாசல் டிராப்?

சிம்புவை வைத்து கேங்ஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இப்படம் 2027-லேயே வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக ‘வடசென்னை 2’ படத்தை எடுக்கவுள்ளார். அதேநேரம், வெங்கி அட்லூரி, ஜீத்து மாதவன், பா.ரஞ்சித் ஆகியோரது இயக்கத்தில் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார் சூர்யா. இதனால் வெற்றிமாறன் – சூர்யா கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘வாடிவாசல்’ படம் டிராப் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.