News October 5, 2025
ரோஸோ லக்ஸம்பர்க் பொன்மொழிகள்

*ஒருவர் செய்யக் கூடிய மிக புரட்சிகரமான விஷயம் என்னவென்றால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உரக்க எடுத்துரைப்பதுதான்.
*எப்படி கற்பது என்ற பாடத்தை மறக்கவில்லையெனில் நாம் வெற்றியாளர்களே.
*போர் என்பது சீராக, திட்டமிடப்பட்ட பிரம்மாண்ட கொலை.
*புரட்சி நடப்பதற்கு முன் அது சாத்தியமற்றதாகவே கருதப்படுகிறது; நடந்த பிறகு அது தவிர்க்க முடியாததாகப் பார்க்கப்படுகிறது.
Similar News
News October 5, 2025
ஓவியங்களே பொறாமை கொள்ளும் ஓவியா PHOTOS

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஓவியாவுக்கு, பிக் பாஸ் மூலம் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பெரும் ரசிகர் பட்டாளம் உருவானது. ஓவியா, சமீப காலங்களில் தமிழ் படங்கள் நடிப்பதில்லை என்றாலும், ரசிகர்கள் குறையவில்லை. இவர் தற்போது, தனது லேட்டஸ்ட் போட்டோஸை பதிவிட்டுள்ளார். பாருங்க, பிடித்திருந்தா ஒரு லைக் போடுங்க.
News October 5, 2025
தமிழகத்தின் அரசியலால் தீண்டாமை: RN ரவி

தமிழகத்தின் தற்போதைய அரசியலால் தீண்டாமை, பிரித்தாள்வது நிகழ்வதாக கவர்னர் RN ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மாநிலத்தில் சமூகநீதிக்கு எதிரான சம்பவங்களை தினமும் செய்தித் தாள்களில் படிப்பது வேதனையாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். பங்கேற்று உரையாற்றிய அவர், கேரள அரசியல் நாராயண குருவின் கொள்கைகளை முடக்கவில்லை என தெரிவித்த அவர், தமிழக அரசியல் வள்ளலாரின் போதனைகளை பரப்ப முன்னுரிமை அளிக்கவில்லை என்றார்.
News October 5, 2025
டிராபியை கொடுக்காமல் இருந்ததற்காக தங்க பதக்கம்

ஆசிய கோப்பை டிராபியை, பாக்., அமைச்சரும் ACC தலைவருமான மொஹ்ஷின் நக்வியிடமிருந்து பெற இந்தியா மறுத்தது. இதனால் டிராபியை தன்னுடனே எடுத்துச் சென்ற நக்வி, ACC ஆபீஸீல் வந்து டிராபியை பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தார். இந்நிலையில், டிராபி தொடர்பாக நக்வி எடுத்த நிலைப்பட்டை கெளரவிக்கும் வகையில், அவருக்கு Shaheed Zulfiqar Ali Bhutto Excellence தங்க பதக்கம் வழங்கப்படவுள்ளது.