News April 9, 2024
ரொனால்டோ அணி அதிர்ச்சி தோல்வி

சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில், அல்-நாசர் அணி தோல்வி அடைந்துள்ளது. அல்-ஹிலால் அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில், இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. 2ஆவது பாதியில் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அல்-ஹிலால் அணி முன்னிலை வகித்தது. எதிரணி வீரரை தாக்கிய ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். இறுதி நிமிடத்தில் அல்-நாசர் அணி 1 கோல் அடித்து, 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது.
Similar News
News July 7, 2025
சீரியலுக்கு யுடர்ன் போட்ட Ex மத்திய அமைச்சர்

2014 தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோற்றாலும் ஸ்மிருதி இரானிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து பாஜக அழகு பார்த்தது. தொடர்ந்து 2019-ல் ராகுலுக்கு அதிர்ச்சி தோல்வி கொடுத்த அவர் 2024 தேர்தல் தோல்விக்கு பின் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனால் ஸ்மிருதி மீண்டும் டிவி சீரியலுக்கே சென்றுவிட்டார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வந்துவிட்டது.
News July 7, 2025
பிரசவ வலி.. இக்கட்டான சூழல்! சாதுரியமாக செயல்பட்ட பெண்!

பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சாதுரியமாக ரயில் நிலையத்தில் பிரசவம் பார்த்த ராணுவ டாக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சிகிச்சைக்கு கருவிகள் இல்லாத போதிலும், தொப்புள் கொடியை இறுக்க ஹேர் கிளிப்பையும், வெட்டுவதற்கு கத்தியையும் பயன்படுத்தி பிளாட்பாரத்திலேயே பார்த்துள்ளார் ராணுவ டாக்டர். அவரின் சாதுரியத்தை பலரும் பாராட்டுகின்றனர்.
News July 7, 2025
செல்போன் ரீசார்ஜ் கட்டணம் உயர்வு?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டே கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க முடிவெடுகப்பட்டுள்ளதாம். 5G விரிவாக்கம், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இப்போது இதனை அமல்படுத்த தயாராகி வருகின்றன. பேசிக் பிளான்களை தவிர மற்றவைகளை உயர்த்தவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.