News August 15, 2025

இந்தியா வரும் ரொனால்டோ? ரசிகர்களுக்கு HAPPY NEWS!

image

கால்பந்து GOAT ரொனால்டோ இந்தியாவில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘AFC சாம்பியன்ஸ் லீக் 2’ போட்டியில் ரொனால்டோ விளையாடும் சவுதி கிளப்பான அல்-நாசர், இந்தியாவின் கோவா FC இரண்டும் ஒரே பிரிவில் (Group D) இடம்பெற்றுள்ளன. எப்படியும் இரண்டு அணிகளுக்கு இடையே ஒரு ஆட்டமாவது இந்தியாவில் நடைபெறும். அந்த போட்டிக்கு ரொனால்டோ ஆப்சென்ட் ஆகாமல் இருந்தால், ரசிகர்களுக்கு விருந்து நிச்சயம்!

Similar News

News March 9, 2026

மாணவர்கள் கல்வியில் சிறக்க சொல்ல வேண்டிய மந்திரம்!

image

ஓம் வாக்தேவ்யைச வித்மஹே விரிஞ்சி பத்ந்யைச தீமஹி தந்நோ வாணி: ப்ரசோதயாத் பொருள்: பேச்சின் தெய்வத்தை நாம் தியானிக்கிறோம், ஆசைகளை நிறைவேற்றுபவர் மீது நாம் கவனம் செலுத்துகிறோம், தெய்வீகம் நம்மை ஊக்கப்படுத்தி வழிகாட்டட்டும். (இந்த மந்திரத்தை சொல்வதோடு பாட புத்தகத்தை படிக்க வேண்டியதும் அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்) SHARE IT.

News March 9, 2026

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரசரவென குறைந்தது!

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ்(28g) $106(இந்திய மதிப்பில் ₹9,745) குறைந்து $5,045-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ் $3 குறைந்து $81 ஆக உள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் தங்கம் விலை இன்று காலை நேர வர்த்தகத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ₹5,800 குறைந்தது கவனிக்கத்தக்கது. SHARE IT.

News March 9, 2026

திமுகவை காங்கிரஸ் மிரட்டியுள்ளது: EPS

image

திமுக என்ற மக்கள் விரோத ஆட்சியை அடிப்படையிலிருந்து அகற்ற வேண்டும் என்று ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று கூடி NDA கூட்டணி அமைத்துள்ளோம் என EPS தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், அதிமுக பாஜகவுக்கு அடிமை என்று ஸ்டாலின் கூறி வருகிறார்; காங்கிரஸ் திமுகவை அடிமையாக்கி கூட்டணி வைத்த சம்பவத்தை யாரும் மறக்கவில்லை என்றார். திமுகவை மிரட்டி 28 இடங்களை காங்கிரஸ் வாங்கியுள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!