News April 16, 2025
ஆட்சியில் பங்கா; கூட்டணியா? அமித் ஷா சொன்னது என்ன?

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாவதற்கு முன்பே, அமித் ஷா தனது X பக்கத்தில் NDA கூட்டணி அமையும் என கூறியிருந்தார். கடந்த ஏப்.11 ஆம் தேதி சென்னை வந்தபோது அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்திருந்தார். அப்போது எந்த ரியாக்ஷனும் தராத இபிஎஸ், இப்போது கூட்டணி மட்டுமே, ஆட்சியில் பங்கு இல்லை என தெளிவுப்படுத்தியுள்ளார்.
Similar News
News January 22, 2026
BREAKING: கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து

ஒருதலை காதல் காரணமாக கோவையில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கே.ஜி.கல்லூரியில் IT முதலாம் ஆண்டு படிக்கும் மாணவியை அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவி காதலை ஏற்காததால் கல்லூரி வளாகத்தில் வைத்தே அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News January 22, 2026
தனிச் சின்னத்தில் தமாகா போட்டி: ஜி.கே.வாசன்

NDA-வில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பியூஷ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் அனைத்து கட்சிகளும் NDA-வில் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். கூட்டணி 100% முழுமை பெற்றவுடன் தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும், தமாக தனிச்சின்னத்தில் போட்டியிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News January 22, 2026
+2 பொதுத்தேர்வு.. ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு மார்ச் 2-ல் தொடங்கி மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, மாணவர்களின் பதிவெண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் அனைத்து HM-களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. <


