News March 26, 2025
தனஸ்ரீயை கடுமையாக சாடிய ரோஹித் மனைவி?

சாஹல் – தனஸ்ரீ விவாகரத்து பெற்றதை தொடர்ந்து, தனஸ்ரீயை ‘கோல்டு டிக்கர்’ என கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இன்ஸ்டா இன்ப்ளூயன்சர் ஒருவர் இவ்வாறாக தனஸ்ரீயை விமர்சித்த பதிவை, ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா லைக் செய்துள்ளார். இது பலரின் கவனத்தையும் பெற்று வைரலாகியுள்ளது. ‘கோல்டு டிக்கர்’ என்பது, பணம் அல்லது சொத்துக்காக ஒருவருடன் உறவில் இருக்கும் பெண்ணை விமர்சிக்க பயன்படுத்தப்படும் சொல்.
Similar News
News March 29, 2025
இன்று இரவு இந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது

இன்று இரவு 9.44 மணிக்கு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. இதனால், மதியம் 1 – 2, இரவு 8 – 9 ஆகிய நேரங்களில் சமைக்கக்கூடாது, சாப்பிடக்கூடாது. சனிக்கிழமை சனி ஓரையில் சிவனுக்கு ஒற்றைப்படை எண்ணிக்கையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனிக்கிழமை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு, கண் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு தேவையான மருத்துவ, உணவு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
News March 29, 2025
ஒரு கிலோ முருங்கைக்காய் ₹2

கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை கடும் சரிவை சந்தித்து வருகின்றது. விளைச்சல் அதிகரிப்பு காரணமாக கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ₹5க்கு விற்பனையானது. இந்நிலையில், தூத்துக்குடி சாத்தான்குளம் பகுதிகளில் கிலோ ₹2 வரையும், மற்ற மாவட்டங்களில் ₹3 முதல் ₹4 வரையும் விற்பனையாகிறது. முருங்கைக்காய்க்கு விலை இல்லாததால், கூலிக்கு கூட கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
News March 29, 2025
குணால் கம்ராவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மீது 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் ஜல்கான் மேயர், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் ஒருவர் என மூவர் கர் காவல்நிலையத்தில் அளித்த புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குணால் கம்ராவுக்கு வரும் 7ஆம் தேதி வரை சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் வழங்கியுள்ளது.