News March 7, 2025
ரோஹித் கொடுக்கப்போகும் பயங்கர அதிர்ச்சி

சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலுடன் சர்வதேச ODI போட்டிகளில் ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டி20 உலகக்கோப்பையில் நடந்தது போலவே, CT கோப்பை வென்று கொடுத்த பின் அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அடுத்த ஒரு ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி விட்டு, சர்வதேச போட்டிகளுக்கு Good Bye சொல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News March 9, 2025
இன்றைய பொன்மொழிகள்!

*அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். *செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. *நீ ஊமையாய் இருக்கும் வரை உலகம் செவிடாய் தான் இருக்கும். *மண்டியிட்டு வாழ்வதைவிட, நிமிர்ந்து சாவது மேலானது. *எதிரிகளும், தோல்வியும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவன், முழுமையாக வாழவில்லை என்றே அர்த்தம். * எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நாட்டை ஏமாற்றுவது எளிதானது – சே குவேரா.
News March 9, 2025
சிரியாவில் பயங்கர மோதல்: 2 நாட்களில் 600 பேர் பலி!

சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்கிறது. கடந்த 2 நாட்களில் பாதுகாப்புப் படையினருக்கும், முன்னாள் அதிபர் பஷார் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 600 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு பிரிவினரிடையே மோதல் தொடங்கியதில் இருந்து நடந்த மிக மோசமான வன்முறை இதுவாகும். தெருக்களிலும் கட்டிடங்களிலும் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. பனியாஸ் நகரத்தில்தான் இறப்பு எண்ணிக்கை அதிகம்.
News March 9, 2025
‘காளிதாஸ் 2’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

2019-ம் ஆண்டு பரத் ‘காளிதாஸ்’ என்ற திரில்லர் படத்தில் நடித்து இருந்தார். போலீஸ் அதிகாரியாக நடித்த அந்தப்படம் மக்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது, இதன் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்நிலையில், ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். கோடை விடுமுறையில் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.