News October 8, 2025
கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின் ரோஹித்தின் முதல் பேச்சு

கேப்டன் பதவி பறிபோன பிறகு முதல்முறையாக, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடர் குறித்து ரோஹித் சர்மா பேசியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அதை சரியாக பயன்படுத்த முயற்சி செய்வதாகவும், அணியின் வெற்றிக்கு சிறு காரணமாக இருப்பதை நினைத்து பெருமை கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 8, 2025
3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

2025-ம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. உலோக-கரிமம் கட்டமைப்பு தொடர்பான மேம்பாட்டுக்காக (For the development of metal–organic frameworks) ஜப்பானின் சுகமு கிடகாவா, ஆஸ்திரேலியாவின் ரிச்சர்ட் ராப்சன் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஓமர் எம்.யாகி ஆகியோருக்கு நோபல் விருது பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
News October 8, 2025
கவர்னர் தேர்தல் பரப்புரையை தொடங்கிவிட்டார்: உதயநிதி

எல்லா கட்சிகளும் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ள நிலையில், சமீபத்தில் கவர்னரும் பரப்புரையை தொடங்கியுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகம் யாருடன் போராட போகிறது என கவர்னர் RN ரவி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகம் கவர்னருடன் போராடி கொண்டிருப்பதாகவும், தொடர்ந்து போராடி வெல்வோம் என்றும் கூறியுள்ளார்.
News October 8, 2025
விஜய்க்காக மதுரை தவெகவினர் ஒட்டிய போஸ்டர்

கரூர் சம்பவத்தில் விஜய்க்கு எதிராக சூழ்ச்சி நடப்பதாக தவெகவினர் கூறிவருகின்றனர். இதனாலேயே மனதளவில் சோர்ந்துள்ள விஜய் இன்னும் களத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய்க்கு தெம்பூட்டும் வகையில் மதுரையில் தவெகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், கரூர் விவகாரத்தில் உண்மை வெளிவரும் என சொல்லும் வகையில் MGR-ன் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதால் மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.