News October 28, 2025
ஓய்வு பெறும் ரோஹித்.. பயிற்சியாளர் பரபரப்பு Statement!

நிச்சயமாக ரோஹித் 2027 உலக கோப்பைக்கு பிறகுதான் ஓய்வு பெறுவார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசி, தொடர் நாயகன் விருதை வென்ற ரோஹித், தனது டார்கெட் 2027 உலககோப்பைதான் என தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், அவருக்கு பதிலாக இளம் வீரர்களை அணியில் சேர்க்க BCCI முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News October 29, 2025
தகதகவென மின்னும் மாளவிகா

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தொடர்ச்சியாக இன்ஸ்டாவில், போட்டோஸை பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில், மாளவிகா, பொன்னொளியில் மலர்ந்த முகத்துடன், உயிர் பெற்ற ஓவியமாக, பிரகாசமாக ஒளிர்கிறார். உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News October 29, 2025
EPS தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், EPS தலைமையில், பூத் கமிட்டி அமைக்க நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், வரும் நவ.2-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News October 28, 2025
உணவு வீணடிக்கும் நாடுகளில் இந்தியா எந்த இடம்?

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் (UNEP) அமைப்பின்படி, உணவுகள் அதிகளவில் வீணடிக்கப்படும் நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சராசரியாக ஆண்டுக்கு எந்தெந்த நாடுகளில், எவ்வளவு உணவுகள் வீணாகிறது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உணவு வீணாவதை தவிர்க்க என்ன செய்யலாம்? உங்கள் ஐடியாவை கமெண்ட்ல சொல்லுங்க.


