News March 27, 2024
Fyling Kiss கொடுத்து கிண்டலடித்த ரோஹித் ஷர்மா

Fliying kiss கொடுத்து கிண்டலடித்த ரோஹித் ஷர்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மார்ச் 24ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில், SRH வீரர் மாயங் அகர்வாலை வீழ்த்திய மகிழ்ச்சியில் KKR வீரர் ஹர்ஷித் ராணா அவருக்கு Flying Kiss கொடுத்து கிண்டலடித்தார். இந்நிலையில், அதனை நினைவூட்டும் விதமாக நேற்று பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவும் அதே போல் Flying Kiss கொடுத்து மாயங் அகர்வாலை கிண்டலடித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
BREAKING: 2026-ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி

தமிழக மக்கள் மிக மகிழ்ச்சியுடனும் ஆரவாரத்துடனும் கொண்டாடும் போட்டி என்றால், ஜல்லிக்கட்டுதான். இந்நிலையில், 2026-ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.3-ம் தேதி புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.
News December 31, 2025
எவ்வளவு குடிச்சா போலீஸ்கிட்ட மாட்டாம தப்பிக்கலாம்?

ஒரு பீர் அடிச்சா போலீஸ் பிடித்தாலும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் நபரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, உங்க உடம்புல கொஞ்சமா ஆல்கஹால் கலந்தாலும் போலீஸ் சோதனையில்(Alcohol reading metre) நிச்சயம் தெரிந்துவிடும். போலீஸ் வைத்துள்ள மெஷினில் 35 புள்ளிகள் காட்டினால் நீங்கள் மது அருந்தியவர் என்பதை அவர்கள் உறுதி செய்துவிடுவர். எனவே மது ஒரு சொட்டு குடித்தாலும் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதே சிறந்தது..
News December 31, 2025
ஒருவருக்கு ₹13.48 கோடி சம்பளம் வழங்கும் OpenAI!

உலகிலேயே டெக் ஸ்டார்ட்அப்களில் அதிக சம்பளம் வழங்கும் நிறுவனமாக OpenAI உள்ளதாக The Wall Street Journal தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் மொத்தம் 4,000 பேர் வேலை செய்யும் நிலையில், பங்குகள் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக ₹13.48 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. உலகின் 18 பெரிய டெக் நிறுவனங்கள் IPO வெளியிடுவதற்கு முன் வழங்கும் சராசரி ஊதியத்தை விட இது 34 மடங்கு அதிகமாகும்.


