News May 29, 2024

ரோஹித் ஷர்மா ஓப்பனிங் இறங்க கூடாது

image

டி20 உலகக்கோப்பையில் ரோஹித் ஷர்மா 4ஆவது இடத்தில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். தொடக்க வீரர்களாக கோலி & ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், சுழற்பந்து வீச்சை சிறப்பாக விளையாடும் ரோஹித் 4ஆவதாக களம் இறங்க வேண்டும் என்றார். முன்னாள் வீரர்கள் பலரும் ரோஹித்-கோலி ஓப்பனிங் இறங்க வேண்டும் என்று கூறிய நிலையில், இவர் மாற்று கருத்தை கூறியுள்ளார்.

Similar News

News August 21, 2025

தவெக யாருடன் கூட்டணி.. மாநாட்டில் விஜய் அறிவிப்பு

image

2026 தேர்தலில் DMK- TVK இடையேதான் போட்டி என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது. அப்படி இருக்கும்போது, TVK எப்படி ஒட்டும் என்றார். மேலும், நேரடி அடிமை கூட்டணியுடன் ஒருபோதும் தவெக இணையாது என்றார். மேலும், MGR ஆரம்பித்த ADMK, தற்போது பொருந்தா கூட்டணியில் சிக்கி தவிப்பதாக அதிமுகவையும் சாடினார். விஜய்யின் கூட்டணி முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

News August 21, 2025

மாநாட்டுக்கு தடைகளை ஏற்படுத்திய அமைச்சர்: ஆதவ்

image

மதுரை தவெக மாநாட்டிற்கு அமைச்சர் மூர்த்தி பல தடைகளை ஏற்படுத்தியதாகவும், அவை அனைத்தையும் உடைத்தெறிந்து மாநாட்டை நடத்தி காட்டியுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். உண்மையை சொன்னதால் அமைச்சரவையில் இருந்து பிடிஆர் ஓரங்கட்டப்பட்டார் எனக்கூறிய அவர், மதுரையில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் அமைச்சர் மூர்த்தி சமூகநீதி காவலரா?, அவரை ஏன் திமுக ஆதரிக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

News August 21, 2025

MGR போல் நல்ல குணம் கொண்டவர் விஜயகாந்த்: விஜய்

image

MGR குணம்போல், நல்ல குணம் கொண்டவர் விஜயகாந்த் என மதுரை மாநாட்டில் விஜய் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். MGR உடன் நெருங்கி பழக முடியாமல் போனது மிகவும் வேதனை அளிப்பதாக கூறிய அவர், மதுரை மண்ணின் மைந்தர் விஜயகாந்தின் அன்பை பெற்றவன் இந்த விஜய் என்றார். MGR, விஜயகாந்தை தவெகவினர் துணைக்கு அழைப்பது, அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைவர்கள்(ADMK, DMDK) கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!