News April 15, 2024
சிக்ஸரில் ரோஹித் சர்மா சாதனை

சென்னை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிவரும் ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது டி20 போட்டிகளில் 500 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக 1,056 சிக்சர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட்(860), ரசல்(678), கொலின் முன்ரோ(548) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
Similar News
News December 20, 2025
ராசி பலன்கள் (20.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 20, 2025
அரசன் சிம்புவின் அரசி இவர்தானா? PHOTO

‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் வெளியாகி ரசிகர்களை ஆனந்தத்தில் திளைக்க வைத்துள்ளது. காரணம், கோவில்பட்டியில் நடைபெற்றுவரும் முதற்கட்ட ஷூட்டிங்கில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். இதைவிட பெரிய சர்ப்ரைஸாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நடிகை யோகலட்சுமி உள்ளார். இதனால் இவர் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதுமையான காம்போ எப்படி இருக்கும்?
News December 20, 2025
CM தொகுதியில் என்ன ஆகும்?

புதிய வாக்காளர் வரைவு பட்டியலில், CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 1.03 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஆதிராஜாராமை 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வீழ்த்தினார். இந்நிலையில், தற்போது நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை, அதைவிட அதிகம் இருப்பதால் வரும் தேர்தலில் தாக்கம் ஏற்படுமோ?


