News March 10, 2025
விமர்சித்தவரையே பாராட்ட வைத்த ரோகித் சர்மா

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாட்டு வீரருக்கான தோற்றத்தில் இல்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது தெரிவித்திருந்தார். இதையடுத்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி வென்ற நிலையில் ரோகித்துக்கு ஷாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு ரோகித் வழிவகுத்துள்ளார் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News March 10, 2025
நடிகைக்கு அரசு நிலம் ஒதுக்கீடா? இறுகும் சிபிஐ பிடி

தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2023ல் அவரது நிறுவனத்திற்கு கர்நாடக தொழில்துறை மேம்பாட்டு வாரியம் 12 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னணி என்ன? அரசியல் பின்புலம் உள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நடிகைக்கு எதிராக விசாரணை வளையம் விரிவடைந்துள்ளது.
News March 10, 2025
லலித் மோடியின் வனுவாட்டு பாஸ்போர்ட் கேன்சல்!

நிதி மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிச்சென்ற IPL முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு வழங்கப்பட்ட வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்ய,
அந்நாட்டின் பிரதமர் ஜோதம் நபாட் உத்தரவிட்டுள்ளார். அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, எந்த குற்றப்பின்னணியும் தெரியவில்லை. ஒரு வேளை இன்டர்போல் அலர்ட் விடுத்திருந்தால், விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
News March 10, 2025
முத்துவேல் பாண்டியன் ரிட்டர்ன்ஸ்! ஸ்பெஷல் போஸ்டர்!

ரஜினியின் ஜெயிலர் 2 படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. அதற்காக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நெல்சன் 2 ஆம் பாகத்தை கையில் எடுத்துள்ளார். படத்தில் எந்தெந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தின் கதை என்னவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?