News December 24, 2024
ரோஹித் ஷர்மா விளையாடுவது உறுதி

பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாடுவது உறுதியாகியிருக்கிறது. பயிற்சியின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தன்னுடைய உடல்நிலை குறித்து பேசியிருக்கும் கேப்டன், நலமாக இருப்பதாகவும் நிச்சயம் நான்காவது டெஸ்டில் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.
Similar News
News July 7, 2025
NRI சிம் மூலம் இந்தியாவில் UPI பயன்படுத்த முடியுமா?

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI), வெளிநாட்டு மொபைல் நம்பரை பயன்படுத்தி UPI மூலம் இந்தியாவில் பரிவர்த்தனை செய்யும் சேவையை IDFC ஃபர்ஸ்ட் வங்கி அறிமுகம் செய்துள்ளது. இதனை NRI (அ) NRO கணக்கு வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. இதற்கு IDFC ஃபர்ஸ்ட் வங்கி App-ல் லாக்-இன் செய்து ‘Pay’ என்பதை கிளிக் செய்து புதிய கணக்கை உருவாக்கி பயன்படுத்தலாம்.
News July 7, 2025
விவசாயிகள், நெசவாளர்களின் குறைகளை கேட்ட இபிஎஸ்!

2026 தேர்தலுக்காக தனது சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து தொடங்கியுள்ளார் <<16973576>>இபிஎஸ்<<>>. இந்நிலையில், தேக்கம்பட்டியில் விவசாயிகள், நெசவாளர்கள் & செங்கல் உற்பத்தியாளர்கள் ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்திவருகிறார். இதில், SP வேலுமணி உள்ளிட்ட பல அதிமுக மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக தொடங்கியுள்ள இந்த சுற்றுப்பயணம் தேர்தலில் எதிரொலிக்குமா?
News July 7, 2025
திமுக ஐடி விங்கில் இணையும் டாக்டர் அழகுராஜா!

திமுக ஐடி விங் மாநில துணைச் செயலாளராக டாக்டர் அழகுராஜாவை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக புதிய வியூகங்களுடன் திமுக களமிறங்குகிறது. குறிப்பாக சோசியல் மீடியாக்களில் அரசின் திட்டங்கள், அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் வதந்திகளை மக்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் என ஐடி விங்கிற்கு தலைமை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.