News January 5, 2025
ரோகித் ஷர்மா உண்மையான ஜாம்பவான்: ரெய்னா

இந்திய கிரிக்கெட்டின் உண்மையான ஜாம்பவான் ரோகித் ஷர்மா என முன்னாள் வீரர் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார். ரோகித் ஷர்மாவின் நேர்மை மற்றும் தன்னலமற்ற தன்மை மூலம் தலைமைத்துவத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும், தேவைப்படும் போது அணியில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இந்திய அணியின் வெற்றிக்காக அவருடைய அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
டாலர் சிட்டியில் தொழில் பாதிப்பு: EPS

டிரம்ப் வரி விதிப்பால் டாலர் சிட்டியான திருப்பூரில் 50% தொழில்கள் முடங்கிவிட்டதாக EPS தெரிவித்துள்ளார். தொழில் அதிபர்களை ஸ்டாலின் சந்திக்காதது தவறு என தெரிவித்த அவர், பாதிப்புகளை PM மோடியிடம் CM எடுத்து கூறி இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் முன் உள்ளூர் தொழிலை பாதுகாக்க வேண்டும் எனவும் திமுக அரசை EPS வலியுறுத்தியுள்ளார்.
News September 13, 2025
ராசி பலன்கள் (13.09.2025)

➤மேஷம் – உயர்வு ➤ரிஷபம் – சினம் ➤மிதுனம் – அன்பு ➤கடகம் – போட்டி ➤சிம்மம் – ஜெயம் ➤கன்னி – நன்மை ➤துலாம் – பகை ➤விருச்சிகம் – இன்பம் ➤தனுசு – திடம் ➤மகரம் – பெருமை ➤கும்பம் – மகிழ்ச்சி ➤மீனம் – விவேகம்.
News September 12, 2025
நெருங்கும் தீபாவளி: நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை?

டெல்லியில் மட்டும் ஏன் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுகிறது என CJI பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை உண்டு எனவும், பட்டாசு, காற்று மாசுபாடு கொள்கைகள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அவரது இந்த கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது.