News March 30, 2025

IPL வரலாற்றில் பெயரை பொறித்த ரோஹித்

image

GTக்கு எதிரான நேற்றைய போட்டியில் 2 பவுண்டரிகளை அடித்து IPL வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் ரோஹித். IPLல் அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில், 601 ஃபோர்களுடன் அவர் 4ஆம் இடத்தை பிடித்துள்ளார். 768 ஃபோர்களுடன் தவான் முதலிடத்திலும், 711 ஃபோர்களுடன் கோலி 2ஆம் இடத்திலும், 663 பவுண்டரிகளுடன் வார்னர் 3ஆம் இடத்திலும் உள்ளனர். நேற்றைய போட்டியில் ரோஹித் 8 ரன்கள் மட்டுமே எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 19, 2026

இவரல்லவா கலெக்டர்!

image

ஏழைகளுக்காக கலெக்டர் எடுத்த முடிவு வரவேற்பை பெற்றுள்ளது. ராஜஸ்தானின், ராஜஸ்மந்த் மாவட்ட கலெக்டர் அருண் குமார், மாவட்டத்தின் அனைத்து ஏழைகளுக்கும் ரேஷன், விதவைகளுக்கு ஓய்வூதியம், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் வரை சம்பளம் வாங்க மாட்டேன் என அறிவித்துள்ளார். ‘உத்தரவிட்டாச்சு வேலை முடிஞ்சுது’ என இல்லாமல், அதிகாரிகள் திட்டத்திற்கான பணிகளை விரைந்து முடிக்க இம்முடிவை எடுத்துள்ளாராம்.

News January 19, 2026

UAE அதிபரை நேரில் சென்று வரவேற்ற PM மோடி

image

ஒருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த UAE அதிபரை டெல்லி ஏர்போர்ட்டிற்கு நேரில் சென்று PM மோடி ஆரத்தழுவி வரவேற்றார். இந்த போட்டோக்களை X-ல் பகிர்ந்துள்ள அவர், UAE அதிபரான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் வருகை, வலுவான இந்தியா-ஐக்கிய அரபு அமீரக நட்புறவிற்கு அவர் அளிக்கும் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. எங்கள் கலந்துரையாடல்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

News January 19, 2026

நாளை காங்., செயற்குழு கூட்டம்

image

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். 2026 தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க இந்த செயற்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. தேசிய தலைவர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!