News October 9, 2025

ரோஹித், கோலி மரியாதையாக நடத்தப்பட வேண்டும்: அஸ்வின்

image

ரோஹித் மற்றும் கோலி விஷயத்தில் BCCI அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். இருவரும் 2 சகாப்தங்களாக அணிக்காக விளையாடிய சீனியர்கள் எனவும், அவர்கள் அணியில் நீடிக்க தகுதியுடையவர்கள் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். மேலும், கேப்டன் பொறுப்பில் ரோஹித் இருக்க வேண்டியவர் எனவும், இருப்பினும் 2027 WC-ஐ கவனத்தில் கொண்டு BCCI எடுத்த முடிவில் உடன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 9, 2025

உலகின் துயரத்தை போக்கவே ராமாயணம்: மோகன் பகவத்

image

உலகின் துயரத்தை போக்கவே வால்மீகி ராமாயணத்தை படைத்ததாக RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். பகவான் ராமர் எப்போதும் நம்முடன் இருந்தாலும், அவரை அனைவரது வீடுகளுக்கும், வாழ்க்கையிலும் கொண்டு சென்றது வால்மீகி தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த பாரம்பரியத்தை மனித குலம் பொறுப்புணர்வுடன் முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 9, 2025

அரசுத் துறையில் வேலை; ₹35,000 வரை சம்பளம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் 1096 பணியிடங்கள் உள்ளன. Block Coordinator, Special Educator, Case Manager, Occupational Therapist பணிகளுக்கு ₹35,000 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு M.A.Physiotherapy/Occupational Therapy/psychology முடித்திருக்க வேண்டும். ₹12,000 வரை கிடைக்கும் Office Helper, Sanitation & Security-க்கு 10th Pass போதும். அக்.14-க்குள் <<-1>>tnrightsjobs<<>> -ல் அப்ளை பண்ணுங்க.SHARE.

News October 9, 2025

FLASH: கோல்ட்ரிப் சிரப் வழக்கில் மேலும் இருவர் கைது!

image

21 குழந்தைகள் உயிரை குடித்த கோல்ட்ரிப் இருமல் சிரப் வழக்கில் மேலும் இருவரை ம.பி., போலீசார் கைது செய்துள்ளனர். காலையில், ஸ்ரீசென் பார்மா நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், TN போலீசார் உதவியுடன் காஞ்சிபுரத்தில் ஸ்ரீசென் பார்மா நிறுவன மேலாளர் ஜெயராமன், ஆய்வக உதவியாளர் மகேஸ்வரி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!