News January 23, 2025
10 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சியில் ரோஹித்..

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர் விளையாடும் ரஞ்சி போட்டி தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் ரோஹித் விளையாடுகிறார். இதே அணியில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் விளையாடுகிறார்கள். அதே போல, உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்கும் சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா விளையாடுகிறார்.
Similar News
News December 6, 2025
கிருஷ்ணகிரி: இரயில்வேயில் வேலை, ரூ.40,000 சம்பளம்!

கிருஷ்ணகிரி மக்களே, RITES இரயில்வே நிறுவனம், உதவி மேலாளர் உள்ளிட்ட பதவிகளில் 400 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 6, 2025
விஜய் பொதுக்கூட்டத்தில் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி

புதுச்சேரியில் வரும் 9-ம் தேதி விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், டோக்கன் உள்ளவர்கள் மட்டுமே கூட்டத்தில் பங்கேற்க முடியும் எனவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
News December 6, 2025
சமூகநீதியை காக்க உறுதியேற்போம்: விஜய்

தவெக அலுவலகத்தில் அம்பேத்கரின், படத்திற்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையை பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என சூளுரைத்துள்ளார். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர் அம்பேத்கர் என்றும் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.


