News April 4, 2024
சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து ரோகிணி பரப்புரை

திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடிகை ரோகிணி பரப்புரை செய்தார். திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து வீடுவீடாக நோட்டீஸ் வழங்கி அவர் ஆதரவு திரட்டினார். இதைத் தொடந்து நால்ரோடு பகுதியில் வாக்கு சேகரித்த அவர், சிபிஎம் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பரப்புரையின் போது பொதுமக்கள் நடிகை ரோகிணியுடன் புகைப்படம் எடுத்தனர்.
Similar News
News November 10, 2025
தேர்தலில் EPS-க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: RS பாரதி

பாஜகவுக்காக EPS நடத்திய அடிமை ஆட்சியால், நீட் முதல் மின்சாரம் வரை தமிழகத்தின் உரிமைகளை இழந்துள்ளதாக RS பாரதி விமர்சித்துள்ளார். மாநில மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் தரும் SIR-யை கண்டிக்க திராணியில்லாமல் EPS வக்காலத்து வாங்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு துணை போகும் EPS-க்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 10, 2025
யூடியூபரை மன்னிக்க முடியாது: கவுரி கிஷன்

நடிகை கவுரி கிஷனிடம் எடையை கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூபர் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது, மன்னிப்பே இல்லை என கவுரி பதிவிட்டுள்ளார். மேலும், அது ஒரு வேடிக்கையான கேள்வி என்று யூடியூபர் சொன்னதை சுட்டிக்காட்டிய அவர், பெயரளவுக்கான வருத்தத்தை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News November 10, 2025
BREAKING: விலை மளமளவென குறைந்தது

GST 2.0 மூலம் அனைத்து கார் நிறுவனங்களும் விலை குறைப்பை அதிரடியாக அறிவித்து வருகின்றன. ஹோண்டாவை தொடர்ந்து மாருதியும் நவம்பர் மாத ஆஃபர்களை அறிவித்துள்ளது. எந்த காருக்கு, என்ன ஆஃபர் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்க எந்த கார் வாங்க பிளான் பண்ணுறீங்க?


