News October 8, 2024
பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ், AI படிக்கலாம்..!

2025-26 கல்வியாண்டு முதல் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதன்படி, ICSE, ISC பாடமுறையில் பயிலும் +1, +2 மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ், AI படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தேசிய கல்விக் கொள்கை- 2020ன் படி இந்த மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதன்மூலம், 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News August 23, 2025
காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு மரியாதை

சீர்காழி காவல் சரகம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஒரு கட்டை பையில் ஒரு கைபேசி மற்றும் ரூ.5,100 பணமும் கிடந்துள்ளது. இதனைக் கண்ட ஆட்டோ ஓட்டுநர் காமராஜ் என்பவர் சீர்காழி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காணாமல் போன பொருள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனருக்கு சீர்காழி காவல் நிலையம் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
News August 23, 2025
தலையில்லாத விநாயகர் கோயில்!

புராணங்களின் படி, பார்வதி நீராடச் சென்றபோது, வெளியே விநாயகர் காவலுக்கு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த சிவனை, விநாயகர் உள்ளே செல்ல விடாமல் தடுக்க, கோபமடைந்த சிவன் விநாயகரின் தலையைத் துண்டித்தார். தலை துண்டிக்கப்பட்ட இடமாக கருதி, உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோயிலில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் முன்கடியா என்ற கிராமத்தில் தலையில்லாத விநாயகர் கோயில் அமைந்துள்ளது. SHARE IT.
News August 23, 2025
விஜய்யை பூமர் என கலாய்த்த அண்ணாமலை

‘அங்கிள்’ என ஸ்டாலினை தவெக தலைவர் விஜய் பேசியிருப்பது சரியில்லை என்றும், விஜய்யை ‘பூமர்’ மாதிரி பேசுகிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவரது மனது கஷ்டப்படாதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணியை வெற்றிப் பெற செய்து, EPS-யை CM ஆக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதாக அண்ணாமலை தெரிவித்தார்.