News October 4, 2025

ரோபோ சங்கரின் மகள் உருக்கம்

image

ரோபோ சங்கரின் இறப்புக்கு பிறகு முதல்முறையாக மீடியாவை சந்தித்த அவரது மகள் இந்திரஜா உருக்கமாக பேசியுள்ளார். ‘மக்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. அப்பாவின் பாதையில் தொடர்வோம். அப்பாவிற்காக அன்பை வெளிப்படுத்தவே அவரது இறுதி ஊர்வலத்தில் அம்மா நடனமாடினார். அதனை புரிந்து கொள்ளாதவர்கள் தான் அம்மாவை விமர்சித்தனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News October 4, 2025

2027 ODI WC-ஐ வெல்வதே ஒரே இலக்கு: ஷுப்மன் கில்

image

ODI கேப்டனாக நியமித்தது தனக்கு பெரிய கவுரவம் என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 2027 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்வதே தங்களுடைய ஒரே இலக்கு எனவும், அதற்கு முன்பாக இருக்கும் 20 ODI போட்டிகளில் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி, உலகக்கோப்பையை வெல்ல தயாராவோம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ODI கேப்டனாக சிறப்பாக அணியை வழிநடத்த முயற்சிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 4, 2025

கர்ப்பிணிகள் காபி குடித்தால் குழந்தைகளுக்கு பாதிப்பா?

image

கர்ப்ப காலத்தில் காபி, டீ குடிக்க வேண்டும் என சிலருக்கு அடிக்கடி தோன்றும். ஆனால், அது உங்கள் குழந்தைக்கும், உங்களுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்துகிறதாம். நிறைய காபி, டீ குடிப்பதால் ரத்த அழுத்தம், பதற்றம் அதிகரிக்கும், அஜீரணக் கோளாறு, குழந்தைக்கு சேர வேண்டிய சத்துக்கள் சேரமுடியாமல் போவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே Avoid பண்ணுங்க கர்ப்பிணிகளே. SHARE.

News October 4, 2025

சாதி பெயரில் இருக்கும் ‘ன்’ விகுதியை நீக்க கோரிக்கை

image

சாதி பெயரில் இருக்கும் ‘ன்’ விகுதியை எடுத்துவிட்டு ‘ர்’ விகுதியை சேர்க்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளதாகவும், கடைசி தமிழன் மூச்சு இருக்கும் வரை, அவர்களின் உயிரில் சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை, எப்படிப்பட்ட எதிரிகள் வந்தாலும், இந்த இனம் சளைக்காமல் போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!