News September 18, 2025

ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ரோபோ சங்கர்

image

நடிகர் ரோபோ சங்கருக்கு ‘வாயை மூடி பேசவும்’ திரைப்படம் வெள்ளித்திரைக்கான கதவை விசாலமாக திறந்தது. பின்னர் ‘மாரி’ படத்தில் இவர் நடித்த சனிக்கிழமை கதாபாத்திரம், ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அன்னைக்கு காலைலே ஆறு மணி’ காமெடி காட்சிகள் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட். அவரது நகைச்சுவை காட்சிகளை பகிர்ந்து பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உங்களுக்கு பிடித்த காட்சி எது?

Similar News

News March 25, 2026

மகிழ்ச்சியான மனநிலைக்கு சிறந்த பழக்கங்கள்!

image

➤விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ➤சிறிய தருணங்களை ரசிப்பது. ➤சாகச பயணங்கள் மேற்கொள்ளுங்கள். ➤உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ➤தினமுன் நன்றாக தூங்குங்கள். ➤தினமும் சிறிதுநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். ➤நண்பர்கள், உறவினர்களுடன் அவ்வப்போது பேசுதல். ➤உங்களுக்கென அதிக நேரத்தை ஒதுக்குங்கள்.

News March 25, 2026

விஜய் விவகாரம்.. சமுத்திரக்கனி விளக்கம்

image

விஜய் குறித்து பேசியது தொடர்பாக சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது என்று கூறிய அவர், அது ஒரு அக்கறை, வலி மற்றும் என் மனதில் பட்டதாக நான் பார்க்கிறேன் என்றார். மேலும், வீடியோ எடுக்கும்போதே தனக்கு தெரியும் என்றும், வீடியோவுக்கு மானே தேனே போட்டு தம்பிகள் வேற வேலையை பாத்துடாங்க எனவும் தெரிவித்தார்.

News March 25, 2026

சர்தார் வல்லபாய் பொன்மொழிகள்

image

➤கடின உழைப்பும் தியாகமுமே வெற்றியின் அடித்தளம். அவை இல்லாமல், மிகப்பெரிய கனவுகள் கூட நிறைவேறாமல் போய்விடும். ➤முயற்சியில் காட்டும் நிலைத்தன்மையும் மனவுறுதியும், சாதாரணச் செயல்களை அசாதாரணச் சாதனைகளாக உருமாற்றுகின்றன. ➤நாம் சமத்துவ உணர்வை வளர்த்து, தீண்டாமையை ஒழிக்க வேண்டும். ➤இன்பமும் துன்பமும் காகிதப் பந்துகள் போன்றவை.

error: Content is protected !!