News February 26, 2025

‘Transformers’ புகழ் ராபர்டோ ஓர்சி காலமானார்

image

ஹாலிவுட்டின் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களான Star Trek(2009), ‘Transformers’, Transformers: Revenge of the Fallen உள்ளிட்ட படங்களின் கதாசிரியரும் தயாரிப்பாளருமான ராபர்டோ ஓர்சி(51), சிறுநீரக நோயால் காலமானார். சயன்ஸ் ஃபிக்‌ஷன் கதைகளுக்காக மிகவும் புகழ்பெற்ற இவர், ‘Mission Impossible III’ ‘The Legend of Zorro”The Mummy’ ‘The Amazing Spider-Man 2’ உள்ளிட்ட படங்களிலும் கதை & தயாரிப்பில் பங்களித்துள்ளார்.

Similar News

News February 27, 2025

CT தொடரில் இருந்து வெளியேறியது இங்கிலாந்து

image

நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து மூன்றாவது அணியாக இங்கிலாந்து வெளியேறியுள்ளது. ஏற்கெனவே குரூப் ஏ-வில் இருந்து வங்கதேசமும் பாகிஸ்தானும் வெளியேறியுள்ளன. இந்நிலையில், ஆஸ்திரேலியா & ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த இங்கிலாந்து, லீக் போட்டிகளிலேயே வெளியேறியுள்ளது. இதுவரை, இந்தியா & நியூசிலாந்து அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

News February 27, 2025

மகா சிவராத்திரி மகிமைகள் தெரியுமா?

image

மகா சிவராத்திரி மகிமைகள் குறித்து ஆன்மிகத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது, மகா சிவராத்திரியன்று கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது என்றும், இதனால் இன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத் தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

News February 27, 2025

‘பெயர் சொல்லும் பிள்ளைகள் நீங்கள் தானே..’

image

உ.பி.யில் சண்டை ஒன்றில் பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு, அனில் கவுர் என்பவர் சிறையில் தவித்துள்ளார். தந்தையை காப்பாற்ற முடிவெடுத்த அவரின் பிள்ளைகள் ரிஷப், உபசனா இருவருமே சட்டம் பயின்று வக்கீலாக வழக்கில் ஆஜராகினர். அவர்களின் விடாமுயற்சி காரணமாக 11 ஆண்டுகள் கழித்து, அனில் விடுவிக்கப்பட்டுள்ளார். பாசத்திற்காக சட்டத்துடன் மோதி, அப்பாவைக் காப்பாற்றிய இவர்கள்தான் ‘உண்மையில் பெயர் சொல்லும் பிள்ளை ’!

error: Content is protected !!