News February 23, 2025
கூகுள் மேப் மூலம் கொள்ளை: ஞானசேகரன் வாக்குமூலம்

கூகுள் மேப் மூலமாக, பள்ளிக்கரணையில் சொகுசு பங்களாக்களை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள 150 சவரன் நகைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் மீதான திருட்டு வழக்குகள் குறித்த விசாரணையில், இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.
Similar News
News February 24, 2025
INDvsPAK போட்டியில் ஹர்திக்கின் காதலி?

நடாஷா உடனான விவாகரத்துக்குப் பிறகு, ஹர்திக் பாண்ட்யா, பிரிட்டிஷ் பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், துபாயில் நடந்த போட்டியில் ஜாஸ்மின் கலந்து கொண்டது இந்த வதந்தியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அக்சர் படேலின் மனைவிக்கு அருகில் அமர்ந்து IND அணிக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையேயான உறவு உண்மைதான் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
News February 24, 2025
வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதல்வர் எதிர்ப்பு

வழக்கறிஞர் சட்டத்திருத்த மசோதாவுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த மசோதா சட்டத்துறை சுயாட்சியின் மீதான தாக்குதல் என்றும், 2014 முதல் நீதித்துறையின் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கையில் பாஜக அரசு ஈடுபட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, அதில் வழக்கறிஞரின் வாதம் விளக்கு போன்றது என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News February 24, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!