News March 13, 2025
14 கடைகளில் கொள்ளை: ஷாக்கான திருடர்கள்

மஹாராஷ்டிராவின் தானேவில் ஒரே இரவில் 14 கடைகளில் நடந்த கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதிர்ச்சியடைந்தது கடைகாரர்கள் அல்ல; கொள்ளையர்கள்தான். 14 கடைகளில் 8ல் மட்டுமே கல்லா பெட்டியில் பணம் இருந்துள்ளது. மற்ற கடைகளில் இல்லை. கிடைத்த பணமும் வெறும் ₹27,000 தான். காரணம் அனைத்துமே UPI பரிவர்த்தனை. இதனால் பெரிய இழப்பில் இருந்து தப்பியிருப்பதாக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் கடைகாரர்கள்.
Similar News
News March 13, 2025
அட்லீயின் டிமாண்ட்… எஸ்கேப்பான சன் பிக்சர்ஸ்!

அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்திற்கு அட்லீ பெரிய பட்ஜெட்டை நீட்ட, சன் பிக்சர்ஸ் ஒதுங்கி விட்டதாம். அடுத்ததாக இப்படத்தை அல்லு அர்ஜுன், தில் ராஜுவிடம் எடுத்து செல்ல அட்லீ ₹100 கோடி சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே, அட்லீயின் குருவால் சுமார் ₹150 கோடி வரை இழந்த தில் ராஜூ, எப்படி மீண்டும் இவ்வளவு பெரிய பணத்தை கொடுப்பது என யோசனையில் இருக்கிறாராம். சம்பளமே ₹100 கோடினா… பட்ஜெட் எவ்வளவு இருக்கும்?
News March 13, 2025
மகளிர் உரிமைத் தொகை உயருகிறதா?

மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன. அதற்கு காரணம் நாளை தாக்கலாகும் TN Budget. புதுவையில் நேற்றைய பட்ஜெட்டின் போது இந்த நிதி ₹1,000லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ₹1,500, பஞ்சாபில் ₹1,200 வழங்கப்படும் நிலையில், இத்திட்டத்திற்கு வித்திட்ட தமிழகத்திலும் ₹2,500ஆக உயர்த்த வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.உங்கள் கருத்து என்ன?
News March 13, 2025
ரேவந்த் ரெட்டிக்கு நேரில் அழைப்பு!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா Ex CM நவீன்பட்நாயக், ஆந்திர Ex CM ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா CM ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.