News August 4, 2025
CRPF வீரர் வீட்டில் கொள்ளை: அண்ணாமலை கண்டனம்

கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்த 22.5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதுவரை நகை மீட்கப்படவில்லை என பெண் CRPF வீரர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். இதுபற்றி பேசிய அண்ணாமலை, போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காதனாலே வீடியோ பதிவிட வேண்டிய சூழலுக்கு அப்பெண் தள்ளப்பட்டார் என்றார். குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றுவதும், தேசத்தை காக்க கூடியவர்கள் உதவிக்காக கெஞ்சுவதும் தான் திமுக மாடல் அரசு என்றார்.
Similar News
News August 4, 2025
KISS கொடுத்தால் 8,00,00,000 பாக்டீரியா பரவும்! fact, fact!

இருவர் LIP LOCK முத்தம் கொடுக்கும்போது, ஒவ்வொரு முறையும் பரஸ்பரம் 8 கோடி பாக்டீரியாக்களை பரிமாறிக் கொள்கிறார்களாம். அதாவது ஒருவர் வாயிலிருக்கும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் மற்றவர் வாய்க்கு செல்கிறதாம். நெதர்லாந்தில் நடந்த ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையாகவே, ஒருவரின் வாயில் 100 கோடி பாக்டீரியாக்கள் வாழுமாம். அப்படின்னா, முத்தத்தில் அன்பு மட்டுமல்ல, பாக்டீரியாவும் ஷேர் ஆகுது!
News August 4, 2025
பள்ளி தண்ணீர் தொட்டியில் நஞ்சை கலந்த பிஞ்சு..!

கர்நாடகாவில் தொடக்க பள்ளியின் தண்ணீர் தொட்டியில் 5-ம் வகுப்பு மாணவன் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேங்க் லீடராக தன்னை நினைத்துக் கொண்ட அந்த பையனின் பேச்சை, சக மாணவர்கள் கேட்கவில்லையாம். இதனால், வீட்டில் இருந்து பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து வந்து, இந்த கிரிமினல் வேலையை அவன் செய்திருக்கிறான். போலீஸ் விசாரித்தபோது குட்டி கேங்க் லீடர் வசமாக சிக்கியுள்ளான். இதெல்லாம் தேவை தானா?
News August 4, 2025
பெட்ரோல், டீசல் விலை உயரலாம்

அமெரிக்காவின் தடையை ஏற்று, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவுக்கு ஆண்டுக்கு ₹80,000 கோடி முதல் ₹97,000 கோடி வரை கூடுதல் செலவாகலாம். பிற நாடுகளிடம் எண்ணெய் வாங்கும்போது ஒரு பேரலுக்கு குறைந்தது ₹438 கூடுதலாக செலவாகும். இது மேலும் உயரலாம். இதனால் உள்நாட்டிலும் விலை உயரும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அனைத்து பொருள்கள், சேவைகள் விலை உயரும். இந்தியா என்ன செய்ய வேண்டும்?