News April 9, 2024

சற்று நேரத்தில் சென்னையில் ரோடு ஷோ

image

பிரதமர் மோடி இன்று மாலை 6.30 முதல் 7.30 மணி வரை சென்னையில் சாலைப் பேரணி செல்கிறார். 6.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் அவர், 6.30 மணிக்கு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் இருந்து பேரணியை தொடங்குகிறார். தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 2 கிமீ ஊர்வலமாக வரும் மோடி, சென்னை பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். பின்னர் கிண்டி ராஜ் பவனில் இரவை கழிக்கவுள்ளார்.

Similar News

News March 19, 2026

நாமக்கல் மக்களே.. இனி அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News March 19, 2026

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அக்கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், வட சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் ரமேஷ், EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். சென்னையில் தீவிரமாக களப்பணியாற்றுமாறு அவரிடம் EPS அறிவுறுத்தியுள்ளாராம். இதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த J கிருஷ்ணமூர்த்தியும் மீண்டும் தாய் கழகத்திற்கு திரும்பியுள்ளார்.

News March 19, 2026

41 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்து.. அரசு அதிரடி

image

பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக பார்லிமெண்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், 2025-ல் மட்டும் 41.41 லட்சம் போலி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளிடம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் போலி ரேஷன் கார்டுகள் களையெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!