News May 4, 2024
சாலை அமைக்கும் சீனா; தடுத்து நிறுத்துமா இந்தியா?

சியாச்சின் பனிமலைக்கு வடக்கே ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. இந்த சாலையைப் பள்ளத்தாக்கின் (16,333 அடி) மேல் பகுதிவரை சீனா நீட்டித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறுமென பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். சியாச்சினில் நீண்ட கால பாதுகாப்பு திட்டங்களில், மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News February 13, 2026
பிப்ரவரி 12: வரலாற்றில் இன்று

1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
2019 – புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட நாள்
1483 – முகலாயப் பேரரசர் பாபர் பிறந்த தினம்
1952 – சுஷ்மா சுவராஜ் பிறந்த தினம்
News February 13, 2026
பாமகவில் இருந்து உருவான கட்சிகளின் லிஸ்ட்

ராமதாஸ் தரப்பு ‘அய்யா பாமக’ என்ற கட்சியை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. பாமகவில் இருந்து பிரிந்து புதிய கட்சி தொடங்குவது இது முதல்முறை அல்ல. மக்கள் நல உரிமைக் கழகம் (பண்டிருட்டி ராமசந்திரன்), தமிழ் பாமக (தீரன்), தமமுக (ஜான் பாண்டியன்), தமிழர் அரசு ( பசுபதி பாண்டியன்), தமிழக வாழ்வுரிமை (வேல்முருகன்), மக்கள் விடுதலை கழகம் (முருகவேல்ராஜன்) உள்ளிட்ட பல கட்சிகள் உருவெடுத்து இருக்கிறது.
News February 13, 2026
EPS-ஐ ‘வாஷிங் மெஷினில்’ போட்டு வைத்துள்ள பாஜக

சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நடத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற T.K.S.இளங்கோவன், அதிமுகவையும், இபிஎஸ்ஸையும் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜக அரசுக்கு EPS துணை போவதாகவும், பாஜக தனது ‘வாஷிங் மெஷினில்’ இபிஎஸ்ஸை போட்டு வைத்துள்ளதாகவும் சாடினார். மேலும் எவ்வளவு பெரிய திருடனும் பாஜகவுடன் சேர்ந்தால் ‘நல்லவன்’ ஆகிவிடலாம் என்பதற்கு அதிமுகவே சாட்சி எனத் தெரிவித்தார்.


