News April 4, 2025
சாலை விபத்து: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

திருப்போரூர் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் (ஹரிதாஸ், லியோ டேனியல், சுகந்தி) உயிரிழந்ததற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 12, 2025
ஆட்டை பலி கொடுக்க போன இடத்தில் 4 பேர் பலி!

இதை சோகம் என்பதா? அதிசயம் என்பதா? ம.பி.யில் மத சடங்கிற்காக, ஆட்டை பலி கொடுக்க 6 பேர் காரில் வேகமாக சென்றுள்ளனர். சாவை நோக்கி வேகமாக போய்க்கொண்டிருந்த ஆட்டை விதி காப்பாற்றியது. கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில், காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைய, இருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அந்த ஆடுக்கு ஒன்றும் ஆகவில்லை. விதி வலியது!
News April 12, 2025
தேமுதிக நிலைப்பாடு என்ன? பிரேமலதா அதிரடி பதில்

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருப்பதால் கூட்டணி குறித்து தேமுதிக இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். வரும் 30-ஆம் தேதி தருமபுரியில் நடக்கவுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினார். மேலும், 2026 தேர்தலை பொருத்தவரையில் தேமுதிக நிதானமாகத்தான் முடிவெடுக்கும் என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.
News April 12, 2025
பிருத்வி ஷாவை வாங்குங்க! வலுக்கும் கோரிக்கை!

CSK பேட்டிங் சொதப்பி வரும் சூழலில், ருதுராஜுக்கு பதிலாக அணியில் பிருத்வி ஷாவை சேர்க்கலாம் என ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். ஓப்பனிங்கில் அடித்து நொருக்கும் ஷாவை, ஏலத்தில் எந்த அணியும் வாங்கவில்லை. CSK-வுக்கு தேவையும் தற்போது அவரை போன்ற ஒரு அதிரடி வீரர் தான். கூடவே, பல ஃபார்ம் அவுட் வீரர்களை ஹிட்டர்களாக மாற்றிய தோனிக்கு பிருத்வி ஷா தான் பெஸ்ட் சாய்ஸ் என்கின்றனர் ரசிகர்கள். நீங்க என்ன சொல்றீங்க?