News October 25, 2025
RO-KO: ஓய்வா? திரும்ப வந்துட்டோம்னு சொல்லு!

ரோஹித் – கோலி பார்ட்னர்ஷிப் அமைத்தால், இந்தியாவை அசைக்க முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. இதுதானே சராசரி இந்திய ரசிகர்களுக்கு வேண்டியது. நீண்டநாள்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக விளையாடி, தனித்தனியாக வென்றுள்ளனர். ஓய்வு குறித்த தகவல் வெளியாகும் நேரத்தில் ரோஹித் சதமும், கோலி அரைசதமும் விளாசியுள்ளனர். தங்களுக்குள் இன்னும் ஃபயர்
இருக்கிறது என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்.
Similar News
News October 26, 2025
5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குவதால், வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. இதனால், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், விடுமுறையில் இருக்கும் குழந்தைகள், மாணவர்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது..
News October 26, 2025
நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக பலி

நேபாளத்தில் கர்னாலி மாகாணத்தில் 18 பயணிகளை ஏற்றிச்சென்ற ஜீப் ஒன்று 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் 10 பேர் காயமடைந்தனர். அதிக வேகமே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
News October 26, 2025
பள்ளிகளுக்கு இங்கெல்லாம் நாளை விடுமுறை அறிவிப்பு

மருது பாண்டியர்களின் நினைவேந்தலையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை(அக்.27) விடுமுறையாகும். ஏற்கெனவே, திருச்செந்தூர் முருகன் கோயில் சூரசம்ஹார விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27 அன்று உள்ளூர் விடுமுறை என்பதால் கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது.


