News October 27, 2025

உள்ளூர் போட்டிகளில் Ro-Ko? கில் விளக்கம்

image

2027 உலகக் கோப்பைக்கு ரோஹித், கோலி தயாராவதற்காக, இருவரையும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வைக்க BCCI முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக ODI கேப்டன் கில்லிடம் கேட்டபோது, இது பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். அதேநேரம், தெ.ஆப்பிரிக்கா, நியூசி., தொடருக்கு இடையே சிறிது இடைவெளி உள்ளதால், அப்போது இதுகுறித்து முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 27, 2025

பிஹாரில் களமிறங்கும் காங்கிரஸ் தலைகள்

image

பிஹார் தேர்தலுக்காக அக்.29, 30 தேதிகளில் ராகுல்காந்தி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். பிஹாருக்கான சட்டமன்ற தேர்தல் நவ. 6,11 தேதிகளில் இருகட்டங்களாக நடக்கவிருக்கிறது. இந்நிலையில், ராகுலுடன் இணைந்து பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகா கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் காங்.,-க்கும், RJD-க்கு பூசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

News October 27, 2025

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

image

இந்தோனேசியா அருகே திமோர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள், அலறியடித்துக்கொண்டு சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பாதிப்பு, உயிர்சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

News October 27, 2025

DMK Vs BJP.. மாறிமாறி விமர்சனம்

image

அதிமுகவின் உரிமைகளை பாஜகவிடம் EPS அடகு வைத்துவிட்டதால், மக்களின் உரிமைகளை காக்க வேண்டியவர்கள் திமுகவினரும் தோழமைக் கட்சியினரும்தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி, மாநிலத்தின் உரிமைகளை, வளங்களை லஞ்சம் மற்றும் ஊழலிடம் திமுக விற்று விட்டதால், ஒட்டு மொத்த மாநிலத்தின் நலன்களை பேணி காக்க வேண்டியவர்கள் பாஜக, தோழமை கட்சியினர் தான் என பதிலடி கொடுத்துள்ளார்.

error: Content is protected !!