News January 20, 2026
Ro-Ko-வுக்கு ஷாக் கொடுக்கவுள்ள BCCI?

A+,A,B,C போன்ற பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு BCCI சம்பளம் வழங்கி வருகிறது. தற்போது, A+ பிரிவை நீக்க BCCI ஆலோசித்து வருவதால், ரோஹித் & கோலி ஆகியோர் B பிரிவுக்கு தள்ளப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்திய அணிக்காக அனைத்து ஃபார்மட்டிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே A பிரிவில் இடமளிக்கப்படும். இன்னும் ஓரிரு நாள்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 9, 2026
பிப்ரவரி 9: வரலாற்றில் இன்று

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்
“மருதமலை மாமணியே முருகையா” என்ற பாடலைப் பாடி நடித்த மிகச்சிறந்த பாடகர் மதுரை சோமு பிறந்த தினம்
1984 – தமிழக பரதநாட்டியக் கலைஞர் தஞ்சாவூர் பாலசரஸ்வதி இறந்த தினம்
1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர்
2001 – தமிழ் எழுத்தாளர் சாவி இறந்த தினம்
2012 – இந்திய இசைக்கலைஞர் எஸ். தட்சிணாமூர்த்தி
News February 9, 2026
சசிகலா கட்சியின் பெயர் என்னவாக இருக்கும்?

ஜெ., பிறந்த நாளான பிப்.24-ல் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை கூட்டி தனது பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ள சசிகலா, தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளாராம். கட்சியின் பெயர் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அவர், கட்சியின் பெயரில் அதிமுக கட்டாயம் இடம்பெற வேண்டும் என்பதில் தீர்க்கமாக இருக்கிறாராம். மேலும், ஜெ., அண்ணா திமுக உள்ளிட்ட பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
News February 9, 2026
கூட்டணியை மறைமுகமாக உறுதி செய்த கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் ஊழல் மலிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம் ஒரு கட்சி (DMK, ADMK) என்ற ஆட்சி முறைதான் என்று கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். ‘கூட்டணி ஆட்சி’ என யார் சொல்கிறார்களே அவர்களுடன்தான் கூட்டணி பேசுவோம் என்று தெளிவுபடுத்திய அவர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடும் என்றார். அவரின் இந்த பேச்சு தவெகவுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக சொல்வதுபோல் அமைந்துள்ளது.


