News December 1, 2025
RO-KO ஜோடியை நினைத்து கவலை வேண்டாம்: பதான்

RO-KO ஜோடியின் எதிர்காலம் குறித்து ரசிகர்கள் கவலைப்படுவதை நிறுத்த வேண்டும் என இர்ஃபான் பதான் அறிவுறுத்தியுள்ளார். இந்த 2 லெஜெண்ட்களும் தங்களது கடைசி கட்ட கிரிக்கெட் கரியரை சுதந்திரமாக விளையாடட்டும், ரசிகர்களாகிய நாம் அதை ரசிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ODI WC-க்கு இருவரும் தகுதி பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 1, 2025
87 மொபைல் லோன் ஆப்களுக்கு தடை

இன்றைய காலகட்டத்தில் வங்கிகளை விட 3-ம் தரப்பு மொபைல் ஆப்கள் மூலம் கடன் வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், இதில் பல முறைகேடுகளும் நடக்கின்றன. அந்த வகையில், சட்டவிரோதமாக கடன் வழங்கிய 87 ஆப்களை அரசு தடை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
News December 1, 2025
சமந்தா கல்யாணத்தில் இப்படி ஒரு ஸ்பெஷலா?

நடிகை சமந்தா, தயாரிப்பாளர் ராஜ் நிதிமோரு ஆகியோரின் திருமணம் ஈஷா மையத்தில் நடைபெற்றது. ‘பூதசுத்தி விவாஹா’ என்ற ஸ்பெஷலான முறையில் இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. லிங்க பைரவி சன்னிதியில் வைத்து பஞ்சபூதங்கள் சுத்திகரிக்கப்பட்டு, தம்பதியர் இருவருக்குமான திருமண உறவு பிரதிஷ்டை செய்யப்படுவதே ‘பூதசுத்தி விவாஹா’ முறை. இது இருவர் இடையே ஆழமான பிணைப்பை ஏற்படுத்தும் என ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 1, 2025
நாளை பள்ளிகள் 4 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை(டிச.2) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே <<18440636>>சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர்<<>> ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்புடன் இருங்கள் மக்களே!


