News April 15, 2025
2 பிரிவுகளாகச் செயல்படும் RLJP கட்சி

<<16101772>>RLJP<<>> கட்சி ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு 2 பிரிவுகளாகச் செயல்படுகிறது. ஒரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வான் சகோதரர் பசுபதி குமார் பராஸ் தலைமை வகிக்கிறார். இன்னொரு பிரிவுக்கு ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் தலைமை தாங்குகிறார். இதில் பராசுக்கு மத்திய அமைச்சர் பதவியும் முன்பு அளிக்கப்பட்டது. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அவர் அப்பதவியை ராஜினாமா செய்தார்.
Similar News
News October 17, 2025
எப்படி இருக்கிறது பைசன்: காளமாடன்?

கபடி விளையாட்டும், அதனை சுற்றி நடக்கும் அரசியலும்தான் ‘பைசன்: காளமாடன்’. ப்ளஸ்: எழுத்தாளராக மாரி செல்வராஜ் மீண்டும் வென்றிருக்கிறார். கடைசி 20 நிமிடங்களில் அசத்தி விட்டார். துருவ் விக்ரம் கடின உழைப்பை கொடுத்துள்ளார். பசுபதி திரையில் மிரட்டுகிறார். நிவாஸ்.கே.பிரசன்னாவின் இசை வருடுகிறது. பல்ப்ஸ்: காதல் காட்சிகள் அழுத்தமாக இருந்திருக்கலாம். சில இடங்களில் படம் கொஞ்சம் சலிப்பை கொடுக்கிறது.
News October 17, 2025
டிகிரி முடித்தாலே அரசு வேலை; APPLY NOW!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 1588 காலியிடங்கள் உள்ளன. Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. இப்பணிகளுக்கு ₹9,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. டிகிரி முடித்த இளைஞர்கள் அக்.18-ம் தேதிக்குள் nats.education.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பியுங்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 17, 2025
பேரவையிலேயே எதிரொலித்த பாமக பஞ்சாயத்து

சட்டப்பேரவையில் இருமல் சிரப் விவகாரத்தில் பாமக MLA அருளை பேச அனுமதித்ததற்கு, அன்புமணி தரப்பு MLA-க்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். இதனால் அவையின் மாண்பு கெடுவதாக கூறிய சபாநாயகர், பாமக பஞ்சாயத்துகளை பேரவைக்கு வெளியே வைத்துக்கொள்ளும்படி கூறினார். மேலும், இருமல் சிரப் விவகாரத்தில் முதலில் கடிதம் போட்டது MLA அருள்தான் என சபாநாயகர் அப்பாவு கூறினார்.