News April 13, 2024
கடன் தொல்லை நீக்கும் வழிபாடுகள்…

சனி மற்றும் புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாற்றி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும். இல்லறத்தில் மகிழ்ச்சி பெருகும்.
Similar News
News February 11, 2026
பிப்ரவரி 11: வரலாற்றில் இன்று

1933 – மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்.
1938 – பிபிசி தொலைக்காட்சி உலகின் முதல் அறிவியல் புனைகதை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது.
1990 – 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் நெல்சன் மண்டேலா, சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
1847 – தாமசு ஆல்வா எடிசன் பிறந்த தினம்
1977– இந்தியாவின் 5-வது ஜனாதிபதி பக்ருதின் அலி அகமது இறந்த தினம்
2001 – தமிழ் நடிகர் ஜெய்கணேஷ் இறந்த தினம்
News February 11, 2026
கட்சியில் இருந்து விலகுகிறேன்.. அதிமுகவில் ஐக்கியம்?

உழைப்பிற்கு போதிய அங்கீகாரம் இல்லாததால் IJK-வில் இருந்து விலகுவதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அறிவித்துள்ளார். EPS-ஐ சந்தித்ததால், சமீபத்தில் நடந்த மாநாட்டிற்கு கூட லீமா ரோஸை பாரிவேந்தர் அழைக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த அவர், இணைப்பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். விரைவில் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 11, 2026
செல்வப்பெருந்தகைக்கு அந்த தகுதி கிடையாது: வன்னி அரசு

விசிக, காங்., இடையிலான மோதல் நீண்டுகொண்டே செய்கிறது. காங்., கட்சிக்குள் இருக்கும் குளறுபடிகள், முரண்பாடுகள், கோஷ்டி பூசலை முதலில் செல்வப்பெருந்தகை சரிசெய்ய வேண்டும் என்று வன்னி அரசு பதிலடி கொடுத்துள்ளார். செல்வப்பெருந்தகையின் பேச்சில் நல்ல நோக்கம் இல்லை, அவருக்கு ஏன் இந்த மீடியேட்டர் வேலை கேள்வி எழுப்பினார். மேலும், திருமாவுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு இன்னும் செல்வப்பெருந்தகை வளரவில்லை என்றார்.


