News October 8, 2025
பயோமெட்ரிக் UPI பரிவர்த்தனையின் ஆபத்து

பயோமெட்ரிக் மூலம் UPI பரிவர்த்தனை செய்யும் முறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இது Fast & Easy என்றாலும், இதில் சில ஆபத்துக்களும் உள்ளது. PIN போட்டு, பரிவர்த்தனை செய்யும் போது, தவறான பரிவர்த்தனைகளை தடுக்க முடியும். ஆனால், பயோமெட்ரிக்கில் அதனை செய்ய முடியாது. அதே நேரத்தில், சிலர் போலியாக கைரேகை (அ) Face Recognition மூலம் பணம் திருடவும் வாய்ப்புள்ளதாம்.
Similar News
News October 9, 2025
VIRAL: டிரம்ப்பின் செல்லப் பிராணியா பாக்., பிரதமர்?

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவின் X பதிவு வைரலாகியுள்ளது. புங்கனூர் பசுவை கொஞ்சும் PM மோடி, செல்ல நாய்களை கொஞ்சும் ரஷ்ய அதிபர் புடின், இஸ்ரேல் PM நெதன்யாகு ஆகியோரின் படங்களுடன், பாக்., PM ஷெரிப் மற்றும் ராணுவ தளபதி ஆசிப் முனிர் ஆகியோருடன் டிரம்ப் இருக்கும் படத்தை பதிவிட்ட அவர், ‘எல்லா உலகத் தலைவர்களும் தங்கள் செல்லப் பிராணிகளுடன் உள்ளனர்’ என்று கிண்டலாக கேப்ஷன் வைத்துள்ளார்.
News October 9, 2025
விஜய்யின் தலைமை பண்பு: HC கருத்தை நீக்க கோரிக்கை

கரூர் துயரம் தொடர்பாக அமைக்கப்பட்ட SIT விசாரணைக்கு தடை கோரி தவெக தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், 41 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகளே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விஜய்யின் தலைமை பண்பு குறித்த HC-ன் கருத்தை நீக்க கோரியுள்ள தவெக, கூட்ட நெரிசலில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக HC கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
News October 9, 2025
18 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பொழியும்

தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?