News November 18, 2024

முதியோர் மாநிலமாக மாறும் அபாயம்: CM ஸ்டாலின்

image

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், வரிப் பகிர்வு விவகாரத்தில் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாடு பெற்று வந்த பயன்கள் தொடர்ந்து குறைந்து வருவதாக அவர் குற்றம்சாட்டினர். இந்த நிலை நீடித்தால், முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்பு, முதியோர் அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு மாறும் அபாயம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Similar News

News August 28, 2025

அஜித் ரசிகர்களுக்கு குட் நீயூஸ்.. சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்

image

நடிகை ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் நவ., 20-ம் தேதி ‘அமர்க்களம்’ படம் ரீ-ரிலீஸாக உள்ளது. இதுதவிர, அப்படம் வெளியாகி இந்த ஆண்டுடன் 25-ம் ஆண்டை நிறைவு செய்வதை சிறப்பிக்கும் வகையிலும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அஜித் – ஷாலினி முதலும், கடைசியுமாக இணைந்து நடித்த இப்படத்தில் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. 25 ஆண்டுகளாக தம்பதியர் இருவரும் வெற்றிகரமாக திருமண பந்தத்தை தொடர்ந்து வருகின்றனர்.

News August 28, 2025

‘பிரதமர் மோடியை காணவில்லை’

image

BJP-க்கு எதிராக வாக்கு திருட்டு புகார் கூறிவரும் காங்கிரஸ், ஒருபடி மேலே சென்று PM மோடியை காணவில்லை என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது. காங்.,யின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், மோடியின் போட்டோவுடன், ‘காணவில்லை.. பெயர்: நரேந்திர மோடி, இவர் வாக்காளர் பட்டியலில் மோசடி, வாக்குகளை திருடி தேர்தலில் வெற்றி பெறுவதில் வல்லவர்’ என கடுமையாக விளாசியுள்ளது. காங்கிரஸின் போஸ்ட் தற்போது இணையத்தில் டிரெண்டாகிறது.

News August 28, 2025

Work-ஐ தொடங்கிய நடிகர் ஜெய்

image

ஜெய் நடிக்கும் ‘WORKER’ படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ரீஷ்மா நனையா ஹீரோயினாகவும், யோகி பாபு, பிரவீனா பிரமோத் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதல், காமெடி. ஆக்‌ஷன் கலந்த படமாக ‘WORKER’ உருவாகவுள்ளது. சில ஆண்டுகளாக ஜெய் நடித்த படங்கள் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனால், இந்த படத்தை அவர் பெரியளவில் நம்பி இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!