News April 9, 2024

இந்திய குடும்பங்களில் கடன் அதிகரிப்பு

image

இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பு குறைந்து, கடன் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 டிசம்பர் நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தில் குடும்ப கடன்கள் 40% வரை உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அதே நேரம், குடும்ப சேமிப்பு 5.1% குறைந்துள்ளது. விலை ஏற்றத்தால் வீடு, வாகனங்கள் போன்ற சொத்துகளை வாங்க மக்கள் அதிக கடன் பெறுவதால் சேமிப்பு குறைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Similar News

News March 28, 2026

தவெகவில் இணைகிறாரா Ex அதிமுக அமைச்சர்?

image

அதிமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு அதிமுக Ex அமைச்சர் மணிகண்டனை களமிறக்க தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் மணிகண்டன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த முயற்சியை தவெக கையில் எடுத்துள்ளதாம். இவர் 2021 தேர்தலுக்கு முன்பு நடிகையின் பாலியல் புகாரில் சிக்கி சர்ச்சையானவர்.

News March 28, 2026

கேஸ் சிலிண்டர்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

image

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ள நிலையில், வணிக & தொழில்துறை LPG நுகர்வோருக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. PNG எனப்படும் குழாய் வழி எரிவாயு இணைப்பை பெற, மாவட்ட நகர எரிவாயு விநியோக நிறுவனங்களை தொடர்புகொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு நகர எரிவாயு விநியோக நிறுவனங்களின் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரசாத் என்பவரை 6357469742 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். SHARE IT

News March 28, 2026

அம்மை நோய் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வருவது ஏன்?

image

உங்களுக்கு ஏற்கெனவே சின்னம்மை போட்டிருக்கா? பெரும்பாலானோருக்கு இது மீண்டும் வராது. அது ஏன் தெரியுமா? வெரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் சின்னம்மை பாதிக்கிறது. இந்த நோய் தாக்கிய உடன் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகள் அதை 7-14 நாள்களில் குணமாக்கிவிடும். ஆனால், அந்த ஆன்டிபாடீஸ் அப்படியே உங்கள் உடலில் தங்கிவிடும். இதனால் மீண்டும் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டாலும், அது உடனடியாக அதை அழித்துவிடும். SHARE.

error: Content is protected !!