News August 8, 2024

2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை அதிகரிப்பு

image

இந்தியாவில் 2ஆம் நிலை நகரங்களில் வீடுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் வீடுகளின் விலை 94% என இரட்டை இலக்கத்தில் வளர்ச்சி பெற்றுள்ளது. குறிப்பாக, கோவை, கொச்சி, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஜெய்ப்பூர், ஆக்ரா, லக்னோ, புவனேஸ்வர் உள்ளிட்ட 30 நகரங்களில் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இவற்றின் விலை 54% முதல் 94% வரை அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Similar News

News December 7, 2025

11 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்க்கும்

image

அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 7 மணி வரை) TN-ல் உள்ள 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலைகளில் கவனமாக பயணிக்கவும் மக்களே. உங்கள் ஊரில் மழை கொட்டுகிறதா?

News December 7, 2025

டிசம்பர் 7: வரலாற்றில் இன்று

image

*1926–அரசியல்வாதி கே.ஏ.மதியழகன் பிறந்தநாள் *1939–பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பிறந்தநாள் *1941–PEARL HARBOUR தாக்குதலில் 2,402 வீரர்கள் உயிரிழந்தனர்
*1949-கொடி நாள் கடைபிடிப்பு *2016–நடிகர், பத்திரிகையாளர் சோ நினைவு நாள்

News December 7, 2025

பிக்பாஸில் இந்த வார எவிக்‌ஷன்.. இவர் தான்

image

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பிரஜின் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வார எவிக்‌ஷனில் கனி, விஜே பாரு, விக்கல்ஸ் விக்ரம், அமித், பிரஜின், சாண்ட்ரா, FJ, கானா விநோத், சுபிக்‌ஷா குமார் உள்ளிட்டோர் நாமினேட் ஆகியிருந்தனர். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்றதால் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த பிக்பாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக அமித், சுபிக்‌ஷா எவிக்ட் ஆனதாக வதந்தி பரவியது.

error: Content is protected !!