News April 18, 2024
ஆட்டநாயகன் விருதினை வென்ற ரிஷப் பண்ட்

தன்னை நோக்கி எழுந்த விமர்சனங்களை எல்லாம் பொய்யாக்கிய DC அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். GTக்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில், அசத்திய DC அணியின் வெற்றிக்கு விக்கெட் கீப்பராக 2 கேட்ச் & 2 ஸ்டம்பிங் செய்த அவர், 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து மேட்சை ஃபினிஷிங் செய்தார். 2019க்குப் பின் 5 ஆண்டுகள் கழித்து 7ஆவது முறையாக அவர் ஆட்டநாயகன் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 18, 2026
உடலை நீரேற்றமாக வைத்திருக்க இத பண்ணுங்க

நாம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால், நீரேற்றத்திற்கு தண்ணீரை விட பால் சிறந்ததாம். பாலில் நேச்சுரல் சுகர், புரதம், கொழுப்பு மற்றும் உடல் சீராக செயல்படுவதற்கான மைக்ரோ நியூட்ரியண்ட்கள், எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இவை ஜீரணமாவதற்கு நேரம் எடுக்கும் என்பதால், உடலில் திரவங்கள் நீண்ட நேரம் தங்கி நீரேற்றத்தை தக்கவைக்க உதவுகின்றன. SHARE IT
News January 18, 2026
அதிமுக கூட்டணியை உறுதி செய்கிறாரா TTV?

கூட்டணியை உரியவர்கள் அறிவிப்பார்கள் என TTV தினகரன் கூறியிருந்தார். இந்நிலையில், ஜன.23-ல் தமிழகத்தில் PM மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் TTV பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுக மா.செ.,க்கள் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு வர தயார் நிலையில் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளாராம். இதனால் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணியில் TTV இணைவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News January 18, 2026
விஜய்க்கு கபில்சிபல் எச்சரிக்கை!

பாஜகவுடன் சமரசம் செய்தால் DCM பதவி கிடைக்கலாம், ஆனால் உங்கள் அரசியல் எதிர்காலம் முடிந்துவிடும் என MP கபில்சிபல் கூறியுள்ளார். மேலும், வெற்றிபெற முடியாத மாநிலங்களில் அங்குள்ள சிறிய கட்சிகளுடன் BJP கூட்டணி அமைக்கும், ஆனால் ஆட்சிக்கு வந்தபின் புறக்கணிக்கும் எனவும், அதை TN-ல் முயற்சிப்பதாகவும் எச்சரித்துள்ளார். விஜய்யை NDA கூட்டணிக்குள் இழுக்க BJP முயற்சிப்பதாக பேசப்படுவது கவனிக்கத்தக்கது.


