News June 2, 2024

சாம்சனை விட ரிஷப் பந்த் சிறந்தவர்: கவாஸ்கர்

image

விக்கெட் கீப்பிங் செய்வதில் சஞ்சு சாம்சனை விட ரிஷப் பந்த் சிறந்தவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் கடைசி கட்டத்தில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடவில்லை என்ற கூறிய அவர், வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் கிடைத்த வாய்ப்பையும் அவர் தவற விட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட்டானார்.

Similar News

News September 20, 2025

இட்லி, தோசைக்கு 5% GST, சாப்பாத்திக்கு No GST!

image

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்பது தமிழக அரசியலின் மையக் கருத்தாக இருந்துவரும் நிலையில், GST வரிவிதிப்பு இதை குறிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். வடமாநில உணவுகளான சப்பாத்தி, பரோட்டாவுக்கு GST-ல் விலக்கு அளிக்கப்பட்டுள்ள சூழலில், தென்னிந்தியர்கள் விரும்பி சாப்பிடும் இட்லி, தோசை, இடியாப்பம் ஆகியவை 5% GST பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏன், இந்த பாரபட்சம் எனக் கேட்கின்றனர். உங்க கருத்து?

News September 20, 2025

மிரட்டி பாக்குறீங்களா CM சார்? விஜய்

image

திருச்சி, அரியலூரில் பவர் கட் செய்த திமுக அரசு, RSS தலைவர்கள், மோடி, அமித்ஷா ஆகியோர் வந்தால் இவ்வாறு செய்யுமா என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். நாகையில் பேசிய அவர், பஸ்ஸுக்குள்ளேயே தான் இருக்கணும், கையை இவ்வளவுதான் தூக்கனும் என்று காமெடியான ரூல்ஸ் போடப்படுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், மிரட்டி பாக்குறீங்களா CM சார்? என்று நேரடியாக கேட்ட அவர், அதுக்கு விஜய் ஆளு இல்ல என்று பேசினார்.

News September 20, 2025

கவர்ச்சி ஆடை அணிந்தாலே அவ்வளவுதான்: வேதிகா

image

நடிகைகள் கவர்ச்சியான ஆடை அணிந்தாலே ‘ஓ அப்படியா’ என பேச தொடங்கிவிடுவதாக நடிகை வேதிகா வேதனையுடன் கூறியுள்ளார். தான் கூட அவ்வப்போது பிகினி அணிவதாக தெரிவித்த அவர், தவறான புத்தி கொண்டவர்கள் மாறினால் நல்லது என்றார். மேலும், விமர்சனங்களுக்கெல்லாம் நான் கவலைப்படமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். இறுதியாக ‘காஞ்சனா 3’ படத்தில் பரவலாக அறியப்பட்ட இவர், இன்ஸ்டாவில் கிளாமர் போட்டோஸால் டிரெண்டிங்கில் உள்ளார்.

error: Content is protected !!