News April 13, 2024
நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரிஷப் பண்ட்

லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், ரிஷப் பண்ட் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். லக்னோ அணி பேட்டிங் செய்த போது, 4வது ஓவரை இஷாந்த் ஷர்மா வீச அதனை படிக்கல் எதிர்கொண்டார். அப்போது ஒரு பந்து படிக்கல்லுக்கு லெக் சைடில் சென்றது. கள நடுவர் அதற்கு வைடு (Wide) கொடுத்தார். அதற்கு பண்ட் ரிவியூ கேட்டார். ரிவியூவிழும் வைடு என வந்ததால், கோபமடைந்த பண்ட் கள நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Similar News
News August 17, 2025
அடுத்த ED ரெய்டு தி.மலையில்.. EPS சொன்ன ஹிண்ட்

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் இன்று நடந்த ED ரெய்டு TN அரசியல் களத்தை ஆட்டி படைத்துள்ளது. தென் மாவட்டங்களில் 4 முக்கிய அமைச்சர்கள் தொடர்பான புகார்களை ED தூசு தட்டுவதாக கடந்த மாதமே தகவல் வெளியானது. அந்த வகையில், திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமியிடம் முதலில் ஆட்டம் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், அடுத்த ரெய்டு தி.மலையில் நடக்கலாம் என EPS, இன்றைய பரப்புரையில் பேசியுள்ளார்.
News August 17, 2025
‘புஷ்பா’ படத்தை சாடிய ஏ.ஆர்.முருகதாஸ்?

இன்றைய சினிமாவில் சட்டவிரோத செயல்களை செய்யும் கேரக்டர்கள் தான் ஹீரோவாக உள்ளதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். கெட்டது செய்யும் ஹீரோக்கள் வெல்ல வேண்டும் என இன்றைய ரசிகர்கள் விரும்புவதாகவும், இந்த மனநிலை பெரும்பாலான ரசிகர்கள் மத்தியில் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். சந்தன மரக் கடத்தலில் ஈடுபடும் ஹீரோவை கொண்டாடிய ‘புஷ்பா’ படத்தைதான் அவர் சாடியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
News August 17, 2025
ராசி பலன்கள் (17.08.2025)

➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – ஓய்வு ➤ மிதுனம் – சாந்தம் ➤ கடகம் – பாராட்டு ➤ சிம்மம் – நலம் ➤ கன்னி – இன்பம் ➤ துலாம் – அசதி ➤ விருச்சிகம் – பக்தி ➤ தனுசு – லாபம் ➤ மகரம் – ஆக்கம் ➤ கும்பம் – தனம் ➤ மீனம் – உற்சாகம்.